Advertisment

“தற்கொலை செஞ்சுக்குவேன்னு மிரட்டுனாங்க”- ஏன் நிச்சயமானதை மறைத்தேன் விளக்கமளித்த தர்ஷன்...

பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்று பிரபலமடைந்தவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்த தமிழர். தமிழ் சினிமாவில் நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வசித்து வருகிறார். பிக்பாஸிற்கு பின்னர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்று நடிகர் கமல் அறிவித்திருந்தார்.

Advertisment

dharshan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே ஷனம் ஷெட்டி என்கிற நடிகையை தான் காதலிப்பதாக தெரிவித்தார். அதன்பின் நடிகை ஷனம் ஷெட்டி இனி நான் தர்ஷனுக்கு இடையூராக இருக்கப்போவதில்லை, நாங்கள் இருவரும் பிரேக்கப் செய்துகொள்கிறோம். நான் அவருடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கப்போவதில்லை என்றெல்லாம் அழுதுகொண்டே பேசி, தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்தபோது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியபின் தர்ஷனுக்கும் ஷனம் ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நேற்று ஷனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை நிச்சயம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் கமிஷன் அலுவலகத்தில் புகாரளிக்க வந்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தர்ஷன் அப்போது அவர் பேசியதாவது. “நான் சினிமாவில் நடிகனாகவேண்டும் என்கிற ஆசையில்தான் இலங்கையில் இருந்து. என்னுடைய பைக்கை விற்று, மிகவும் கஷ்டப்பட்டு சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடினேன். 2017ஆம் ஆண்டு பச்சையப்பா சில்க்ஸ் நிறுவன விளம்பர வீடியோவில் நடிக்கும்போதுதான் நான் ஷனம் ஷெட்டியை மீட் செய்தேன். அப்போது அவர்தான் பேஸ்புக்கில் எனக்கு ரிக்குவஸ்ட் கொடுத்தார். அதன்பின் நாங்கள் இருவரும் நண்பர்களானோம். நான் நிறைய படங்களில் வாய்ப்பு தேடி ஆடிஷன்களில் கலந்துகொண்டிருப்பேன். ஷனமும் அவருக்கு தெரிந்த இடங்களில் என்னை குறித்து பரிசீலனை செய்ய கேட்டு பார்ப்பார். அந்த மாதிரி நிறைய படங்களுக்கு விளம்பரங்களுக்கு எனக்காக கேட்டிருக்கிறார்.

அவர் ஒரு படத்தில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் இருந்தார். அந்த படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குனரிடம் கேட்டார். அதன்பின் நான் ஆடிஷனில் கலந்து அதன்பின் நடிக்க தேர்வானேன். அந்த படம் ஒரு 35 நாட்கள் ஷூட் நடைபெற்று, பின்னர் பணம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது. அப்போது அவர் யாரையோ ஒன் சைடாக லவ் பண்ணினார். அது பிரேக்கப்பான பின்புதான் 2018ல் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். அப்போது இரு படங்களில் நடித்தார் ஷனம். அதனால் நாம் காதலிக்கும் விஷயம் வெளியே தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனக்கும் தனிப்பட்ட விஷயங்களை வெளியே சொல்லிக்கொள்ள பிடிக்காது என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

பிக்பாஸில் பங்குபெறுவதற்கு ஆடிஷன் நடைபெற்றபோது என்னுடைய ரெஸுமையும் சேர்த்து அனுப்பினார். பிக்பாஸில் மினிமம் இரண்டு படங்களிலாவது நடித்திருக்க வேண்டும் என்பதுபோல இருந்ததால் நான் தொடக்கத்திலேயே தவிர்க்கப்பட்டேன். அதன்பின் விஜய் டிவியில் என்னுடைய போத்தீஸ் விளம்பரத்தை பார்த்து என்னை ஓக்கே செய்தார்கள். அப்போதுதான் ஷனம் ஷெட்டி வீட்டில் இருவரும் நிச்சயம் செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். நான் எனக்கு தங்கை இருப்பதால் எங்கள் வீட்டில் இப்போது தெரிவிக்க மாட்டேன். அதற்கு சம்மதம் என்றால் நிச்சயம் செய்துக்கொள்கிறேன் என்று ஷனம் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதனால்தான் நான் நிச்சயமே செய்துக்கொண்டேன். பிக்பாஸ் உள்ளேபோய்விட்டு வெளியே வந்தவுடனேயே அம்மாவிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டேன்.

பிக்பாஸ்க்குள்ளே போகும் வரைக்கும் நாங்கள் இருவரும் காதலித்துதான் வந்தோம். என்னால்தான் பிக்பாஸில் ஷனம் ஷெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் சண்டைப் போட்டுக்கொண்டே இருந்தார். ஆனால், நான் நேர்காணலிலேயே தெரிவித்துவிட்டேன் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான், எங்கேஜ்மென்ட் நடக்கவில்லை என்று. நான் உள்ளேபோய் சொன்னதுக்கூட மீரா மேட்டர் வந்ததால்தான் சொன்னேன். நான் உள்ளே போனபோது அவர் பிகினி போட்டு இண்டர்வியூ கொடுத்தது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. ஏன் அப்படி கொடுத்த? என்று கேட்டதற்கு உன்னுடைய புரோமோஷனுக்குதான் கொடுத்தேன் என்று தெரிவித்தார்.

எனக்கு அவங்களை எப்போ பிடிக்காமல்போனது என்றால், இனி பிக்பாஸில் பங்குபெற்ற பெண்கள் போட்டியாளருடன் பேசாத என்று சொல்லிவிட்டு, அவர்களை அன் ஃபாலோவ் செய்தார். எங்கு போனாலும் என்னையும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இதுப்போல பல பிரச்சனைகள் செய்தார். ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்றெல்லம் மிரட்டினார். என்னை வைத்து படம் எடுக்கப்போவதாக சொன்ன மூன்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரில் சென்று, தர்ஷனை வைத்து படம் எடுத்தால் வழக்கு தொடருவேன் என்று மிரட்டியிருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் பேட்டிகளில் என் அம்மா குறித்தும் அவதூராக பேசியுள்ளார். என் அம்மா நீங்கள் இருவரும் காதலித்தால் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்குறேன் என்றுதான் சொன்னார். ஆனால், இவர் என்னென்னமோ கதை கட்டுகிறார். தற்போது நான் அவர் மீது வழக்குத் தொடர மாட்டேன். அவரும் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அதற்கு நான் நன்றியாக இருப்பேன். கமிஷனர் அலுவலகத்தில் அவர் போட்ட வழக்கிற்கு, விளக்கம் மட்டும் ஆதாரங்களுடன் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

sanam shetty tharshan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe