Skip to main content

சிம்புவுக்குள் இப்படி ஒரு குணமா? பிக்பாஸ் தர்ஷனின் தோழி சனம் ஷெட்டி...

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

அண்மையில்தான் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த போட்டியின் வெற்றியாளராக முகின் அறிவிக்கப்பட்டார். சாண்டி ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டார். 
 

tharshan shetty

 

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 7 கோடி வாக்குகளை பெற்று வெற்றியை கண்டார் மலேசியாவைச் சேர்ந்த முகின் ராவ். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். அவரையடுத்து 3வது இடத்தை லாஸ்லியாவும், 4வது இடத்தை ஷெரினும் பெற்றனர்.
 

miga miga avasaram


ஆனால், இந்த போட்டி தொடங்கி ஐம்பது நாட்கள் முடியும்வரை தர்ஷன் என்கிற போட்டியாளர்தான் பிக்பாஸ் 3ன் வெற்றியாளர் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். திடீரென கடைசி எலிமினேஷனாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேட் செய்யப்பட்டார். 

இவரின் தோழி என்று அறியப்படுபவர் மாடல் சனம் ஷெட்டி.  ‘அம்புலி’,  ‘கதம் கதம்’,  ‘சவாரி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமான சனம் ஷெட்டி,
 

puppy


இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “நிறைய நடிகர்களை எனக்கு பிடிக்கும், ஆனால், எஸ்.டி.ஆர்-க்கு உண்மையான ரசிகை. அவரை பற்றி கொஞ்சம்தான் தெரியும், ஆனால் அன்பை அளவின்றி கொடுக்கும் உள்ளம் படைத்த ஒரு மனிதரை இவரிடம் தான் கண்டேன். அனைவரையும் ஒரே மரியாதை மற்றும் அன்புடன் நடத்துவார். தர்ஷன் மற்றும் எனக்கு நீங்கள் அளித்த உத்வேகம் வேற லெவல். வி லவ் யூ சிம்பு. தர்ஷனுக்கு நீங்கள் பரிசளித்த ‘ஹீரோ’ புத்தகம் மிகவும் பிடித்துள்ளது.” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதை அப்போவே சொல்லிருக்கலாமே; நேரம் தான் வீண்" - அபிராமி புகார் குறித்து சனம் ஷெட்டி

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

kalakshetra issue sanam shetty reacts for abhirami statement

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, "அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. இது குறித்து பேச விருப்பமில்லை. கலாஷேத்ரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு" என கல்லூரிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். 

 

அபிராமியின் இந்த கருத்து குறித்து நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆணவம் மற்றும் அறியாமை. பேச விருப்பம் இல்லேனா பேசாம இருங்க. உங்களுக்கு நடக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. 89 வருடங்களாக எங்கே இருந்தீர்கள். அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் ஒரு பக்கம் இருக்கிறீர்கள்? உண்மைக்காக காத்திருங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். 

 

இதனிடையே ஹரிபத்மன் மீது பொய்யாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அபிராமி ஒரு புகாரையும் அளித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹரிபத்மன் சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இந்த பிரச்சனையில் நிர்மலா, நந்தினி ஆகிய 2 ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” எனப் பேசியிருந்தார்.

 

இந்நிலையில், அபிராமியின் இந்த பேச்சிற்கு சனம் ஷெட்டி, "அதே கலாஷேத்ராவில் ஆசிரியர்களால் கொடுமைப்படுத்துதல், கையாளுதல் போன்றவற்றுக்கு ஆளானதை அபிராமி ஏற்றுக்கொண்டுள்ளார். இதை அப்போவே சொல்லிருக்கலாமே. நேரம் தான் வீணானது. இவங்களே இப்போ புது புகார் குடுக்கிறாங்க" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

Next Story

"நாம அடிக்கடி போய்ட்டு வர இடத்திலும் சாதி இருக்குது" - சனம் ஷெட்டி

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

sanam shetty about theatre untouchability issue

 

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்றைய முன்தினம் (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து பார்க்க சென்ற போது, அவர்களை பார்த்த திரையரங்க ஊழியர் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்து உள்ளே செல்ல விடாமல் மறுத்தார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், “யு/ஏ சான்றிதழுடன் இப்படம் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை டிக்கெட் சோதனை ஊழியர்கள் உள்ளே செல்ல மறுத்துள்ளனர்” என விளக்கம் கொடுத்திருந்தனர். பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

 

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல்துறையினர் திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி ஷங்கர், கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்ட பலரும் இது கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இந்த நிலையில், நடிகை சனம் ஷெட்டி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், "இந்தியாவில் பல இடத்தில் புற்றுநோய் போல் உள்ளது இந்த சாதிய பாகுபாடு. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அது ஏன் முடியாது. நம்மால் முடியும். கல்வி மற்றும் இது குறித்த விழிப்புணர்வு இருந்தால் நிச்சயம் முடியும். அந்த திரையரங்கில் உள்ளே நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த நபருக்கு எனது பாராட்டுகள். அந்த வீடியோவால் தான் நாம் அடிக்கடி சென்று வரும் இடத்திலும் சாதி இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. மேலும் தெரியாமல் பல இடத்தில் நடந்து வருகிறது. அதனால் நான் தயவு கூர்ந்து சொல்கிறேன், சாதிய ஏற்றத்தாழ்வு எங்கே நடந்தாலும் அதனை உடனடியாக வீடியோ எடுங்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். தட்டிக் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம். நாம் தான் கேட்க வேண்டும். கண்டிப்பாக ஒரு நாள் இது மாறும்" என்றார்.