Advertisment

வைல்ட் கார்ட் எண்ட்ரீ கொடுக்கும் சர்ச்சை பாடகி! 

சுச்ஹி

Advertisment

பிரபல பாடகியும், சுச்சி லீக்ஸ் மூலம் சர்சையாளர் என்ற பெயரை பெற்ற சுசித்ரா, பிக்பாஸ் 4 போட்டியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக கலந்துகொள்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

மூன்று சீஸன்களை கடந்து நான்காவது சீஸன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அர்ச்சனா திடீரென போட்டியாளராக உள்ளே சென்றார். இந்நிலையில் அடுத்து போட்டியாளராக பல சர்ச்சைகளில் உள்ள பாடகி சுசித்ரா பங்கேற்கிறார். இதற்காக பிரபல நட்சத்திர ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் செய்திகள் வந்தன.

இதனிடையே, ஹோட்டலில் தனிமப்படுத்திக்கொண்டுள்ள சுசித்ரா, நடு இரவில் தன்னை யாரோ கொலை செய்கிறார்கள் என்று அலறியடித்து ஹோட்டல் பணியாளர்களை கூப்பிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில், “வதந்தியை பொய்யாக்க இந்த பதிவை பதிவிட வேண்டியுள்ளது. நான் என் அறையில் பயந்தேன் அல்லது அறையைவிட்டு வெளியேறினேன் என்கிற வதந்தியை யாரும் நம்பவேண்டாம். நான் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் பார்த்துக்கொள்ளப்படுகிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இந்த வியூ இருக்கும்போது யாராவது புகார் அளிப்பார்களா? " என்று தெரிவித்துள்ளார்.

suchitra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe