mugen rao

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் ராவ், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Advertisment

மலேசியாவைச் சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்தார். அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும்பெற்றார். இந்நிலையில், அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

2011ஆம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெப்பம்'. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அஞ்சனா அந்த படத்துக்குப் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.

Advertisment

தற்போது, இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெற்றி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நாயகனாக முகின் ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகிர்த்தி வாஸ் நடித்துள்ளார்.