Advertisment

“பிரபலமான என்னை வைத்து புகழ் அடைய சிலர் முயற்சிக்கின்றனர்”- மீரா மிதுன் பரபரப்பு புகார்...

கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், சில திரைப்படங்களில் நடித்தவருமான மீரா மிதுன், சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார். இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளருமாக பங்குபெற்றார்.

Advertisment

meera mithun

இந்நிலையில், தொழிலதிபர் ஜே மைக்கேல் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழிலதிபர் ஜே மைக்கேல் பிரவீன் காவல்துறையிடம் கொடுத்த புகாரில் பணப்பிரச்சனையில் நடிகை மீரா மிதுன் தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

alt="sixer ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0ad53075-a473-47ed-b4e0-6c5d0218e29f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_0.jpg" />

இதனை அடுத்து, சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீரா மிதுன், பணம் கேட்டு தமது குடும்பத்தை மிரட்டுவதாகவும், ஜோ மைக்கேல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். சமூகத்தில் பிரபலமான முகமாக இருக்கும் தன்னைப் பற்றி பொய் புகார் கூறி புகழ் அடைய சிலர் முயற்சிப்பதாக மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

Biggboss meera mithun
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe