Advertisment

பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.

Advertisment

meera mithun

எவிக்‌ஷனிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் தற்போது எந்த படத்தில் நடிக்கிறார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர் அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். பிக்பாஸிலிருந்து வெளியேறியவுடன் தான் நடிக்கப்போகும் முதல் படம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisment

மீரா மிதுன் முன்னதாக 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

big boss meera mithun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe