Advertisment

வெட்டுக்காயங்களுடன் பிக்பாஸ் மதுமிதா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

Advertisment

madhu

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

முன்னதாக போட்டியாளர் மதுமிதா தற்கொலை முயற்சி செய்துகொண்டு போட்டியைவிட்டு வெளியேறினார். முதலில் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்துகொண்டார் என்று சொல்லப்படவில்லை. அண்மையில் அவரை வைத்தே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கப்பட்டது. அதில் அவர் தற்கொலைக்கான காரணத்தை தெரிவித்தார். வீட்டில் உள்ள பலரும் தன்னை மனரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் மதுமிதா கத்தியால் கையை அருத்துகொண்ட காயத்தை காட்டுவதுபோன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Biggboss madhumitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe