விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி நாடகத்தில் வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் கவின். அதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர். சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதன்பின் நட்ப்புன்னா என்னானு தெரியுமா என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவின்.

lift

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பிக்பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் விரைவில் கவின் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கையில் எந்தவித பட அறிவிப்பும் இன்றி இருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் கவின் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. லிஃப்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் புகழ் அம்ரிதா நடிக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.