Advertisment

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை...

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது. வெளியேறும் போது கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார்.

Advertisment

kasthuri

அப்போது சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். இந்த விஷயங்கள் நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டன. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பெரும் அதிர்த்திச்சி அடைந்தனர். அவரை குற்றவாளி போல் கண்களை கருப்பு துணி கட்டி அழைத்து செல்ல காரணம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இது பற்றி விசாரித்த போது, பிக்பாஸ் வீட்டின் கட்டமைப்பு, சுற்றியுள்ள நிகழ்ச்சி தயாரிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட அறைகள் ஆகியவற்றை பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரை கண்ணை கட்டி அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. வரும் சனிக்கிழமை சரவணன் வெளியேற்றப்பட்ட முழு காரணம் தெரியும் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல் கார்ட் எண்ட்ரி என்று இரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். தற்போது வெளியான இன்றைய புரோமோவில் கஸ்தூரி வீட்டிற்குள் எண்ட்ரியாகி உள்ளார்.

Biggboss kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe