lakshmi menon

கும்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இளம் நடிகை லக்‌ஷ்மி மேனன். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று சமூகவலைதளங்களில் பலரும் வெகுவாக பேசி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டிருந்தார் அவர். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு, ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த பதிவில், பிளேட்களையும், கழிப்பறைகளையும் கழுவப்போவதில்லை என்று குறிப்பிடப்பட்டது பெரும் சர்ச்சையானது. சமூகவலைதளத்தில் பலரும் ஏன் அதெல்லாம் கேவலமான விஷயமா? என லக்‌ஷ்மி மேனனை சாடத் தொடங்கினர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் லக்‌ஷ்மி மேனன். அதில், “கொஞ்ச நேரத்திற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். உனக்கு பிளேட்டு கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமா இருக்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னை கேள்வி கேட்க நீங்க யார்? அனைத்துமே என்னுடைய விருப்பம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்.

Advertisment

எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் அங்கு போகவில்லை. என் வீட்டில் நான் உபயோகிக்கிற பிளேட்டுகள், கழிப்பறைகளை நான்தான் சுத்தம் செய்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, பிளேட்டுகள், கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்கு தேவையில்லை. என்னிடம் பிக் பாஸ் போறீங்களானு கேட்கும்போது, கஷ்டமா இருக்கு. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.