
கோலாகலமாக நடந்துமுடிந்த ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம் பரிசுத் தொகைவழங்கப்பட்டது. ஆரியின் வெற்றிக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ஆரி உடனடியாகத் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார்.
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படம் இன்று (19.01.2021) பூஜையுடன் ஆரம்பமானது. புதுமுக இயக்குநர் அபின் இயக்கவுள்ள இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் ஆரி. க்ரைம்கமர்ஷியல் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)