Advertisment

பிக்பாஸில் பாலியல் தொல்லை...

தமிழ் பிக்பாஸ் தற்போது மூன்றாவது சீஸன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட இந்த பிக்பாஸ் கொஞ்சம் விறுவிறுப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல மொழிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு நல்ல தொகையை சம்பலமாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

bigboss

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸிற்கான போட்டியாளர்களை தற்போதுதான் தேர்வு செய்து வருகிறார்கள். எப்போது அந்த நிகழ்ச்சி தொடர்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisment

இச்சமயத்தில் தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொள்ள படுக்கைக்கு அழைப்பதாக டிவி தொகுப்பாளர் ஸ்வேதா ரெட்டி புகாரளித்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தேடி வந்தது. அதை நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக்கு போன் செய்து உங்களை போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அவர் என்ன அர்த்தத்தில் பேசினார் என்பது புரிந்தது. இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

bigg boss 3
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe