biggboss list

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

Advertisment

தமிழில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீஸன் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார்.

Advertisment

தினசரி, பிக்பாஸ் தமிழில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகின்றன. நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அந்த பதினான்கு பேர் யார் என்பது தெரிந்துவிடும்.

Ad

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 14 பேர் இவர்கள்தான் என்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அந்தப் பெயர்கள்: அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், ரியோ, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஆஜித் காலிக், ஷிவானி, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி முருகதாஸ், ஷனம் ஷெட்டி, கேப்ரல்லா, ஆரி.

Advertisment