ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒருசில திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையே தான் செய்து வந்து நர்ஸ் வேலையைச் சில காலம் நிறுத்திவைத்திருந்த ஜூலி தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா தொற்று காரணாமாக மீண்டும் அந்த வேலையைக் கையிலெடுத்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா வார்டில் சிகிச்சை அளிக்க பயிற்சியை முடித்துள்ளதாகவும், விரைவில் அவர் தனது புனிதமான நர்ஸிங் சேவைக்குத் திரும்ப உள்ளதாகவும் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜூலியின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.