Advertisment

"புகார் எடுக்கவில்லை; செல்ஃபி தான் எடுத்தாங்க" - பிக்பாஸ் பிரபலம் குற்றச்சாட்டு

Bigg Boss 16 fame Gori Nagori issue

Advertisment

இந்தியில் கடந்த பிக்பாஸ் 16வதுசீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன கலைஞர்கோரி நகோரி. இவர்தற்போது காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கடந்த 22ஆம் தேதி என் தங்கை கல்யாணத்திற்கு நான்எனது மேலாளர் மற்றும் நண்பர்களுடன் சென்றேன். அப்போது எனதுமூத்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட எனது மைத்துனர் ஜாவேத் உசேனுடன்சில பிரச்சனைகளால் வாக்குவாதம்ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் எனது நண்பர்களை தாக்கும் அளவுக்கு பெரிதாகிவிட்டது. அத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "இத்தாக்குதல் தொடர்பாக கெகல் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்றேன். எங்களை விசாரித்தஒரு காவல் அதிகாரி புகாரைஎடுத்துக்கொள்ளவில்லை. இது உங்கள் வீடு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் வீட்டில் சரி செய்து கொள்ளுங்கள்என்று அனுப்பிவிட்டார். மேலும் நீண்ட நேரம் என்னை தொந்தரவு செய்தார். பின்பு அங்கேயேஉட்கார வைத்துவிட்டு என்னிடம்செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Advertisment

நானும் அம்மாவும்வீட்டில் தனியாக இருக்கிறோம்.நாங்கள்மிகுந்த ஆபத்தில் இருக்கிறோம். என் உயிருக்கோஎன் அம்மா அல்லது என் நண்பர்களுக்கோ ஏதாவது நடந்தால்அதற்கு இவர்கள்தான் பொறுப்பு.ராஜஸ்தான் மக்களிடம் இந்த கோரிக்கையை மட்டும் வைக்கிறேன்.என் உயிருக்கு ஆபத்து உள்ளது.தயவுசெய்து ராஜஸ்தான் அரசு உதவ வேண்டும்" என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

big boss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe