Skip to main content

"புகார் எடுக்கவில்லை; செல்ஃபி தான் எடுத்தாங்க" - பிக்பாஸ் பிரபலம் குற்றச்சாட்டு

 

Bigg Boss 16 fame Gori Nagori issue

 

இந்தியில் கடந்த பிக்பாஸ் 16வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன கலைஞர் கோரி நகோரி. இவர் தற்போது காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 22ஆம் தேதி என் தங்கை கல்யாணத்திற்கு நான் எனது மேலாளர் மற்றும் நண்பர்களுடன் சென்றேன். அப்போது எனது மூத்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட எனது மைத்துனர் ஜாவேத் உசேனுடன் சில பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் எனது நண்பர்களை தாக்கும் அளவுக்கு பெரிதாகிவிட்டது. அத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், "இத்தாக்குதல் தொடர்பாக கெகல் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்றேன். எங்களை விசாரித்த ஒரு காவல் அதிகாரி புகாரை எடுத்துக்கொள்ளவில்லை. இது உங்கள் வீடு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் வீட்டில் சரி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார்.  மேலும் நீண்ட நேரம் என்னை தொந்தரவு செய்தார். பின்பு அங்கேயே உட்கார வைத்துவிட்டு என்னிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

 

நானும் அம்மாவும் வீட்டில் தனியாக இருக்கிறோம். நாங்கள் மிகுந்த ஆபத்தில் இருக்கிறோம். என் உயிருக்கோ என் அம்மா அல்லது என் நண்பர்களுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு இவர்கள்தான் பொறுப்பு. ராஜஸ்தான் மக்களிடம் இந்த கோரிக்கையை மட்டும் வைக்கிறேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தயவுசெய்து ராஜஸ்தான் அரசு உதவ வேண்டும்" என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.