Skip to main content

பிக்பாஸ் சீசன் 3ல் என்னென்ன புது ரூல்ஸ் போட்ருக்காங்க தெரியுமா...?

Jada-Desktop Jada-mobile
bigboss3

 

உலக அளவில் ஃபேமஸான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் ஹிந்தியில் தொடர்ந்து 10 சீசனுக்கு மேல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு தமிழிலும் பிக் பாஸ் அறிமுகமாகியது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2017 பெரும் வரவேற்பு பெற்றிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஆண்டான 2018ல் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் நடந்து முடிந்தது. இதனால் பிக் பாஸ் 1, பிக் பாஸ் 2க்கு ஸ்பான்சர் செய்த வி வோ (vivo) நிறுவனம் பிக் பாஸ் 3 ஸ்பான்சர் செய்வதில் இருந்து பின் வாங்கியது.

 

bigboss3

 

இதனால் இந்த முறை ஃப்ரூட்டி நிறுவனம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்கிறார்கள். மேலும் கடந்த முறை நடந்த சில சில தவறுகள் எல்லாம் மாற்றியமைத்து இந்த முறை பெரும் பரபரப்பு நிறைந்த விறுவிறுப்பான நிகழ்ச்சியாக இதை எடுத்து செல்லவுள்ளனர். இதுபோக இந்த முறை நிறைய சண்டை சச்சரவோடு நிகழ்ச்சியை எடுத்துச்செல்ல பிக் பாஸ் டீம் வேலை தீயா வேலை செய்து வருகின்றனர். பிக்பாஸ் முதல் இரண்டு சீசனிலும் போடப்பட்ட செட்டில் சில பிரச்சனைகள் இருந்தது. குறிப்பாக மருத்துவ முத்தம் கொடுத்த இடம், ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஸ்மோக்கிங் ரூம் அலப்பறைகள், கழிப்பறை வசதி இல்லாத ஜெயில் செட் என பல்வேறு பிரச்சனைகள் பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியது. 

 

bigboss3

 

அதனால் இந்த முறை மிகுந்த கவனத்தோடு சில சட்ட விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளனர். அதன்படி ஸ்மோக்கிங் ரூமில் ஒருத்தர் மட்டுமே நின்று தம் அடிக்க முடியும். நீண்ட நேரம் உள்ளே இருக்க அனுமதி கிடையாது. உள்ளே உட்காரவும் கூடாது. அதேபோல் ஜெயில் செட்டில் இந்த முறை கழிவறை வசதியோடு அமைத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டிலுள்ள ஹால் முழுவதிலும் நம் புராதான சின்ன சின்ன கோயில் மற்றும்  பழமை வாய்ந்த ஒரு சில விஷயங்கள் எல்லாம் கொண்டு வந்துள்ளனர். மேலும் உள்ளே பத்து தலை ராவணன் உடைய ஒரு படமும், நுழைவு வாயிலில் ஒருவர் வெட்டுவது போன்ற சிலையும் உள்ளது.

 

bigboss3

 

சுவற்றில் கமலின் விருமாண்டி படம் உள்ளது. வேன் போன்ற அமைப்பில் சமையலறையை உருவாக்கியுள்ளனர். புகை உள்ளேயே சுற்றும்படி குனிந்து செல்லும்படியான ஸ்மோக்கிங் ரூம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி படுக்கை அறை உருவாக்கிவுள்ளனர். ஆனால் போன முறை மாதிரி தனி தனி ரூம் கிடையாது.  நடுவுல் இருந்த டிரான்ஸ்பரண்டான சுவரை நீக்கியுள்ளனர். ஆண்களுக்கு க்ரே கலர் பெட் ரூம். பெண்களுக்கு பிங்க் கலர் பெட் ரூம் அமைத்துள்ளனர். வீட்டுக்கு நடுவில் உள்ள நீச்சல் குளம் முழுவதும் ஃப்ரூட்டி பெயரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

bigboss3

 

கழிவறை மற்றும் குளியலறை டேங்கர் லாரி வடிவத்தில் நன்றாக வடிவமைத்துள்ளனர். இது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலூர் நிறைய இயற்கை சார்ந்த விஷயம் நம்ம கலாச்சாரத்தை எடுத்து காண்பிக்கும் விதமாக இந்த செட்டை அருமையாயாகவும், காம்பாக்ட்டாகவும் அமைத்துள்ளனர் பிக்பாஸ் டீம். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிக் பாஸ் 3 எதிர்பார்த்ததை விட நன்றாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படங்களுக்கு கிழே உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யவும் 

https://www.nakkheeran.in/cinema/cinema-news/inside-bigg-boss-3-tamil-house

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்