Advertisment

பிக்பாஸ் 2 ஒளிபரப்பாகும் தேதி...

kamal

Advertisment

ஒரு வீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற அமைப்பில் போட்டியாளர்கள் 15 பேர் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேச முடியும். இப்படியான ரியாலிட்டி ஷோவிற்கு பெயர் தான் 'பிக்பாஸ்'. ஹாலிவுட்டில் பிரபலமான இந்த நிகழ்ச்சி பின்னர் பாலிவுட்டிலும் தடம் பதித்து வெற்றிகண்டு தற்போது தமிழிலும் வெற்றி கொடி நாட்டி வருகிறது.

சென்ற ஆண்டு பரபரப்புடன் நடந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். நடிகை ஓவியா, ஜல்லிக்கட்டு ஜூலி, நடிகர் ஆரவ், கவிஞர் சினேகன் ஆகியோர் இந்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்கள். மேலும் இப்போட்டியின் முடிவில் நடிகர் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சென்ற ஆண்டின் நம்பர் 1 நிகழ்ச்சியாக இருந்த 'பிக்பாஸ்' -ன் இரண்டாவது சீசன் இந்த ஆண்டும் நடக்கவிருக்கிறது. மீண்டும் நடிகர் கமலே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 17ஆம் தேதியில் இருந்து ஆரம்பமாகிறது.

kamalhassan kamal bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe