Kamal Haasan

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

தற்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ஐந்தாவது சீசனுக்கான அறிமுக காணொளியை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.