பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியை யார் தமிழில் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தற்போது இந்த கேள்விக்கான விடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கமல்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார் என்று பலர் சொல்கின்றனர்.

Advertisment

kamal hassan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கமல்ஹாசன் அரசியலில் நுழந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். என்னுடைய கடைசி படமாக இந்தியன் -2 தான் இருக்கும் என்று தெரிவித்தார். அதனால் அவர் டிவி நிகழ்ச்சியிலும் இனி நடிக்க மாட்டார் என்றே கருதப்பட்டது.

Advertisment

பிக்பாஸ் இரண்டு சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமலின் இடத்தை வேறு யாரால் பூர்த்தி செய்ய முடியும் என்று பலர் யோசித்தனர். சிலர் நயன்தாரா தொகுத்து வழங்க அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக எல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது பிக்பாஸ் டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

பிக்பாஸ் மூலம்தான் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கருத்துகளை வெளியுலகிற்கு பகிர தொடங்கினார் என்பது குறிப்பிடத்தகக்து.