முதல் வருட தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரைசா வில்லியம்ஸ். இவர் முதலில் மாடலாக அறிமுகமாகி, பின்னர் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக இருந்த வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை.

தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படுக்கையில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுக்கும்போது மொபைல் போன் தவறி அவருடைய வாயில் விழுந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.