Skip to main content

பிக்பாஸ் டேனி கலக்கும் 'சூப்பர் பொண்ணு சுமாரான பையன்'

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
dani

 

பி.மோகனா மற்றும் ஜீவன் தயாரிப்பில் 'சூப்பர் பொண்ணு சுமாரான பையன்' படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இதில்   மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனி, சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடன இயக்குனர்கள் சாண்டி, ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இப்படத்தை பற்றி படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன் விஜய் கார்த்திகேயன் பேசியபோது...

 

 

 

"நான் சிறிய வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன். வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும், நான் கடவுள் படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், 16 படத்தில் இரண்டாவது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். மேலும் பாக்கியராஜ், அப்புகுட்டி ஆகியோருடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும், அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாகவும், தாத்தா காரை தொடாதே எனும் படத்தை இயக்கியும் உள்ளேன். இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனும் கதாநாயகர்களாக நடித்துள்ளார். 'சூப்பர் பொண்ணு சுமாரான பையன்' இது எனது இயக்கத்தில் இரண்டாவது படம். இப்படத்தை ஒரு கமர்ஷியல் கதையாக உருவாக்கி உள்ளேன் இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்டை மையமாக கொண்ட கதை, என் தந்தையாக மாரிமுத்து அவர்கள் இதை நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் செந்தில், ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு v.விஜய். ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுளோம்.

 

 

சார்ந்த செய்திகள்