Advertisment

பிக்பாஸ் 3 தொகுப்பாளர் மாற்றம்... ரசிகர்கள் மகிழ்ச்சி..

கடந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த முறை தமிழ் பிக்பாஸ் வருகிற 23ஆம் தேதி முதலில் தொடங்குகிறது. இதனையடுத்துதான் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

Advertisment

biggboss

முதல் வருட தெலுங்கு பிக்பாஸில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுப்பாளராக இருந்தார். கடந்த வருடம் நானி தொகுப்பாளராக இருந்தார். ஆனால், இந்த வருடம் யர் தொகுப்பாளராக இருக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் பெயர்களும் அடிப்பட்டது. இவ்வளவு ஏன் அனுஷ்காதான் தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் புரோமோ ஷூட் தொடங்கப்பட்டுள்ளது அதன் மூலம் இந்த வருடம் யார் தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்குபவர் என்ற விபரம் கசிந்துள்ளது. இந்த வருடமும் தொகுப்பாளரில் மாற்றம்தான். கசிந்த புகைப்படத்தின் மூலம் நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழில் மூன்று வருடங்களாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Biggboss kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe