பிக்பாஸ் மீது  ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா?

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை மாதவி லதா, பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

madhavai latha

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று பிக்பாஸ். இந்தியில் 13வது சீசன் தொடங்க உள்ள நிலையில், தமிழிலும், தெலுங்கிலும் 3வது சீசன் ஆரம்பிக்க இருக்கின்றன. தமிழில் வரும் 23ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமல்தான், இதனையும் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கலந்துகொள்ள இருப்பவர்கள் என்று சிலரின் பெயர்கள் அடிப்படுகிறது.

தெலுங்கில் சீசன் 3 விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாதவி லதா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

bigboss
இதையும் படியுங்கள்
Subscribe