Advertisment

பிரம்மாண்டமாக தொடங்கும் பிக் பாஸ் சீசன் 8

big boss season 8 update

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ், இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. இதன் அடுத்த சீசனான 8வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சூழலில் சீசன் 1 முதல் கடைசி சீசன் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலக அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

பின்பு நிகழ்ச்சியின் புரோமோ தமிழகம் முழுக்க, மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில், பெரிய திரையில் மக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக்கேட்டுக்கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, உங்க விருப்பமான ஷோ.. இன்னும் நெருக்கமா, இந்த வாட்டி ‘ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..’ எனும் டேக் லைனை சொல்லி முடிக்கும் டிரெய்லர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் தொடங்குகிறது.

Advertisment
actor vijay sethupathi big boss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe