raiza

ஜோதிகா மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரை பாலா இயக்கிய படம் நாச்சியார். இப்படம் மக்கள் மத்தியில் பெறும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து, என்ன படம் பாலா இயக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கையில், தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை பாலா ரீமேக் செய்வதாக செய்திகள் வந்தது. பிறகு, உண்மையிலேயே பாலா அதை தமிழில் ரீமேக் செய்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாக, மேலும் அந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் தான் ஹீரோ என்றும் உறுதியானது. 'வர்மா' என பெயரிடப்பட்ட அப்படத்தில் மேகா ஹீரோயினாக நடிக்க, காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில், பியார் பிரேமா காதல் என்ற படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படத்தில், ஹீரோயினாக நடித்த ரயிஷாவும் வர்மா படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன் முதலில் பிக்பாஸில் நுழைந்து, பின்னர் அவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ரயிஷா நடிக்க இருப்பது அவரது கேரியரின் முக்கியமான அம்சமாக இருக்க கூடும்.

Advertisment