Advertisment

பிரபல நடிகருடன் நடிக்கும் அனிதா சம்பத்

big boss fame anitha sampath joins vimal new movie

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகஇருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்மூலம்தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் அவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில், மார்ட்டின் நிர்மல் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளார்.

Advertisment

‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்தவிமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றநிலையில், அடுத்ததாக மார்ட்டின் நிர்மல் படத்தில் இணைந்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டஇப்படத்தில் நடிகர் விமலின்தங்கையாக அனிதா சம்பத் நடிக்கிறார். பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். உதய் புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு விரைவில் படத்தின் பெயரை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

oviya vimal kalavani2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe