பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படும் லோஸ்லியா, தற்போது மாலையும் கழுத்துமாக திருமணம் ஆன கோலத்தில் பஸ்லுல்லா முபாரக் என்பவருடன் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பல ரசிகர்கள் லோஸ்லியாவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஆச்சரியப்பட்டுள்ளனர்.இது ஒரு புறம் இருக்க லோஸ்லியாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் பஸ்லுல்லா முபாரக் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் எதற்காக அப்படி நிற்கிறோம், உண்மையில் தாங்கள் யார் என்ற கேள்விகளுக்கு நெட்டிசன்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதில் “தவறான விஷயங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றனது. லோஸ்லியா உடன் தனக்கு ஒரு நல்ல உறவு உள்ளது. அது விஷமிகள் எதிர்பார்ப்பது போல் கிடையாது. அது சகோதரத்துவமான நட்பு. அது எங்கள் பெற்றோர்களும் தெரியும்” என்று பஸ்லுல்லா முபாரக் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் மாலையும் கழுத்துமாக எதற்காக நிற்கிறார்கள் என்று பஸ்லுல்லா முபாரக் உரிய விளக்கம் தரவில்லை என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.