Advertisment

சொடக்கு போடும் கமல்... பிக்பாஸ் - 2 ஆரம்பம் 

irumbu thirai.jpeg

kamal

உலகமெங்கும் புகழ் பெற்ற 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கடந்த ஆண்டு மத்தியில் தமிழில் அறிமுகமானது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் பெரும் வெற்றிபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள். மேலும் கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் தன் அரசியல் குறித்த பேச்சயும், அறிவிப்பையும் சூசகமாக ஆரம்பித்தார். பிறகு நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் தன் அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார். இப்படி பலரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனே நடத்தவிருக்கிறார். மேலும் தன் அரசியல் பயணத்தின் நகர்வுகளை இந்நிகழ்ச்சி மூலமாக இன்னும் சுலபமாக மக்களிடம் கொண்டுசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின் டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது. இந்நிலையில் அந்த டீசர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Advertisment
kamalhassan kamal bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe