Skip to main content

"வேதாளம் 10 மடங்கு க்ரிஞ்ச்" - ரீமேக் செய்த இயக்குநர் பேச்சு

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

bhola shankar director about ajith vedalam

 

தெலுங்கில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'போலா ஷங்கர்'. இப்படம் தமிழில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் மற்றும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் லக்‌ஷ்மி மேனன் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போய் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் இயக்குநர் ஒரு நேர்காணலில், "வேதாளம் படத்தை பார்த்தால் 10 மடங்கு க்ரிஞ்சாக இருக்கும். ஆனால் போலா ஷங்கரை நான் அப்படி இயக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றது போல் படத்தை உருவாக்கியுள்ளேன்" எனக் கூறினார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் உள்ளிட்ட தமிழ்ப் பட ரசிகர்கள் எதிர்வினையாற்றி வந்தனர். 

 

இதையடுத்து இயக்குநர் அதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "2015ல் வேதாளம் படத்தை பார்த்த போது மிகவும் பிடித்திருந்தது. அந்த கதையை ரசித்தேன். இயக்குநர் சிவா சார், அண்ணன் தங்கச்சி பாசத்தை வலுவாக காட்டியிருப்பார். அந்த பாசம் லட்சக்கணக்கான மக்களிடம் பிரதிபலித்தது. அதை தெலுங்கில் காட்ட விரும்பினேன். 2009ல் அஜித்தின் பில்லா படத்தை பிரபாஸை வைத்து ரீமேக் செய்தேன். இப்போது மீண்டும் அஜித் சாரின் ஆக்‌ஷன் படமான வேதாளம் படத்தை சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்துள்ளேன்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

காமி பட ஓடிடி அப்டேட்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
gaami ott update

கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள படம் காமி. இதில் விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. 

இப்படம் குறித்து இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப்  பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம், இப்போது ஜீ5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்