Bhojpuri singer misbehaved in 13yrs old girl

Advertisment

பீகாரைச் சேர்ந்தவர் போஜ்புரி பாடகர் அபிஷேக் என்ற பபுல் பிஹாரி. அவருக்கு வயது 21. இவர் யூட்யூப் சேனலும் நடத்தி வரும் நிலையில் அதை 27 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் ஆடைகளற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப்பார்த்த அச்சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அச்சிறுமியிடம் கேட்ட பொது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை சொல்லியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அப்பாடகரை கைது செய்தனர். பின்பு விசாரணையில், 2 வருடங்களுக்கு முன்பு பாடகர் அபிஷேக்ராஜீவ் நகர் என்ற பகுதியில் வசித்து வந்த போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் நட்பாக பழகிய அவர்ஆசை வார்த்தை கூறி ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அச்சிறுமியை புகைப்படமும் எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்பு பாடகர் புகைப்படத்தை வெளியிட்டதால் இது வெளியில் தெரிந்துள்ளது. இது தொடர்பாக அப்பாடகர் மீது போக்சோ, ஐ.டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.