Bhojpuri actress suman kumari case

Advertisment

இந்திய சினிமாதுறைகளில் ஒன்றான போஜ்பூரி திரையுலகில் நடிகையாக இருப்பவர் சுமன் குமாரி. 24 வயதான இவர் மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தது. இந்நிலையில்,மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த நடிகை பாலியல் தொழில் நடத்திவருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் மும்பை காவல்துறையின் சமூக சேவை பிரிவு, அந்த நடிகையை பிடிப்பதற்காக அவர் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு சுமன் குமாரி என்ற போலி பெயருடைய ஒரு பெண்ணை உள்ளே அனுப்பியுள்ளனர். அங்கு அந்த நடிகையை பார்த்து டீல் பேசுவது போல் பேசியுள்ளார் போலீஸ் அனுப்பிய பெண். இருவரும் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை ஒரு மாடலுக்கு விலை பேசியுள்ளார்கள். அப்போது போலீசார் உள்ளே வந்து அவரை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை கைது செய்து தற்போது போலீஸ் கஸ்டடியில் வைத்துள்ளனர். மேலும் இவருக்கு துணையாக இருந்த மற்றவர்கள் பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மாடல்கள் மும்பையில் திரைப்பட வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்கள். அவர்கள் வாய்ப்பு தேடி கஷ்டப்படுவதை அறிந்த நடிகை சுமன் குமாரி அவர்களை அழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.