Advertisment

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Bhojpuri actor Amrita Pandey passed awa

Advertisment

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாதுஇந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

passed away Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe