Skip to main content

நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் பாவனா - வைரலாகும் புகைப்படம்

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Bhavana at the shooting spot after a long break - photos goes viral

 

பாவனா, மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் 'வெயில்', 'தீபாவளி' உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த பாவனா, கடந்த 2017-ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது. 

 

இதனிடையே பாவனா, 2018-ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கன்னட படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பாவனா, மற்ற மொழி படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'அசல்' படத்திலும், மலையாளத்தில் பிருத்விராஜின் ’ஆதம் ஜான்’ படத்திலும் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு 'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த பாவனாவை, படக்குழு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மிகவும் பயமாக உள்ளது” - பாவனா வேதனை

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
bhavana about his case

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து சமீப காலமாக மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ச்சியாக மலையாள மற்றும் கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் நடிப்பில், கேஸ் ஆஃப் கொண்டனா என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. இப்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹண்ட், நடிகர், தி டோர் என்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் நடிகர் மற்றும் தி டோர் தமிழிலும் வெளியாகவுள்ளது.   

இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை. இதை அறிந்து மிகவும் பயமாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடப்பது வேதனைக்குரியது.

இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017ல் பாவனா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுத்தார். அந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.