Skip to main content

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா

 

bhavana makes his re entry after 12 years in tamil industry

 

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போனது. 

 

இதையடுத்து தற்போது மீண்டும் பழையபடி நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் 'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு', 'ஹண்ட்' மற்றும் கன்னடத்தில் 'பிங்க் நோட்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

 

இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தில் கணேஷ் வெங்கடராமன் நடிக்க கதாநாயகியாக பாவனா நடிக்கிறார். இப்படம் ஹாரர் ஜானரில் உருவாவதாகவும் இயக்குநர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜெயதேவ் இதற்கு முன்பாக கலையரசன் நடிப்பில் 2018ல் வெளியான 'பட்டினப்பாக்கம்' படத்தை இயக்கியுள்ளார். 

 

பாவனா, கடைசியாக அஜித்தின் 'அசல் ' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் தமிழில் நடித்து வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.