Advertisment

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பாரதிராஜா; வெளியான புதிய அறிக்கை

bharathiraja will join vallimayil sets this month end

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வள்ளி மயில்’. கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.என். தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக “வள்ளி மயில்” உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்டபடப்பிடிப்பு நிறைவடைந்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று(2.9.2022) முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்ட அறிக்கையில், “வள்ளிமயில் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று(2.9.2022) முதல் தொடங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 32 நாட்கள் திண்டுக்கல், மதுரை,தென்காசி என படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நேற்று(1.9.2022) பாரதிராஜா அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினேன். இம்மாத இறுதியில் எங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாககூறினார். மீண்டும் பாரதிராஜா அப்பாவுடன் பணியாற்ற ஆவலுடன்உள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

bharathiraja vijay antony director suseenthiran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe