/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1279.jpg)
'ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படத்தில் பார்த்திபன் 'நந்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையொட்டி திரை பிரபலங்கள் பலரும் இரவின் நிழல் படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் பாரதிராஜா இரவின் நிழல் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "என் இனிய தமிழ் மக்களே என் பாசத்துக்குரிய இரா.பார்த்திபனின் இரவின் நிழலை அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து உங்கள் பலத்த கைத்தட்டல்களில் ஆஸ்கார் விருதின் கதவுகள் திறந்து வென்று தமிழனின் சாதனை தொடர விரும்புகிறேன் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)