Skip to main content

"தியேட்டரில் டிக்கெட் விலையைவிட பாப்கார்ன் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வர தயங்குகின்றனர்" - பாரதிராஜா சாடல்! 

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
bgdshs

 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"திரைத்துறையினருக்கு,

வணக்கம்,

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்ததுதான் மிச்சம். எல்லாவற்றிக்கும்
நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளகர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரானபோராட்டம், கேபிள்Tvக்கு எதிரான போராட்டம், DTH க்குஎதிரான போராட்டம் என சொல்லிக் கொண்டே போகாலம். இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம்.

 

என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட்விலையைவிட Popcorn, parking விலை அதிகம். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.? அதனால்தான் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம்காட்டுகிறார்கள். நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த கரோனாகாலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்பகலைஞர்கள், பெப்சிதொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே  ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும்அறிவோம். இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள். தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. எடப்பாடிபழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கைவைத்துள்ளோம். அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சிலகட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம். 

 

ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சிலப்பிரச்சினைகளை பேசிதீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன். குறிப்பாக, மக்கள்நலனில் அக்கறைகொண்டு தியேட்டரில் 35சதவிகிதம் முதல் 50 சதவீதக்குள் சமூகஇடைவெளியுடன்  தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம். 50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனைவாரங்கள் திரையிடப்படும்? ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலேயே தூக்கிவிடுவார்கள். அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப்போவார்கள் குறைந்தது ஒரு திரைப்படம்
வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும். பிறகு தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்படவேண்டும். தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee)
தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவைவழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துகொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு முன்வரவேண்டும். 

 

தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான  டிக்கெட் விற்பனையை  தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். எடுத்துமுடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெருவார்கள். நாமும் நன்றாக இருப்போம். ஆகையால், தமிழ்திரைத்துறை நலிந்துக் 
கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். உடனடியாக தீர்க்கப்படவேண்டும். தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். பிரச்சினைகள் இப்படி இருக்க அதைவிடுத்து, பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாக 
தோன்றவில்லை. சமீபநாட்களில் OTT க்கு எதிரானப்பிரச்சினையை திரு.சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பிவிடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இதற்கு பிண்ணனியில் உள்ள அரசியலை நானும் அறிவேன். நீங்களும்அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலேயே முதலீடு செய்வது ஒரு சிலரே. அதில் திரு.சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர். 

 

திரு.சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள்OTT யில் வரக்கூடாது. திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்ககூடிய ஒன்றுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதைதிரையில் கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது. என் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனித நேயப்பண்பும்,
நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்ககளைமட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும் தொழிளாலர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்களே, விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும். திரு.G.v.பிரகாஷ்குமார் இசை அமைத்து சுதா கொங்குரா இயக்கத்தில் திரு சூர்யா மிரட்டியுள்ள 'சூரரைபோற்று' திரைமுன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்படவரலாற்றில் 'சூரரைபோற்று' முத்திரை பதிக்கும். தமிழனைப் போற்றும்..

 

வாழ்த்துக்கள்
அன்புடன்
பாரதிராஜா" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்'-பவதாரிணி மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'How can I console my friend' - Bharathiraja's condolence on Bhavatharini's passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் குறிப்பில், 'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
bharathiraja about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.