Skip to main content

'சப்பாணி' கேரக்டருக்கு முதலில் பிக்ஸ் பண்ணது இவரை தான்' - பாரதிராஜா சொன்ன உண்மை !

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
bharathiraja

 

கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்த ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் தயாரிப்பில் 19வது படமாக உருவாகியிருக்கும் 'மரகதக்காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது.... "இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம்.

 

 

 

இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். அதனால் இப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார். இப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடியடி, துப்பாக்கி சூடு தொடர்ந்தால்... - பாரதிராஜா எச்சரிக்கை

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
irumbu thirai.jpeg

 

 

bharathiraja


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் இந்த சமயத்தில் இயக்குனர் அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ள 'தடை அதை உடை' என்ற  இசை ஆல்பம் இன்று வெளியானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

 


அப்போது, விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஸ்டெர்லைட் பிரச்சனையை பற்றி பேசியபோது... "ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன்...? எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் திருச்சியில் ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்டதில் சீமான் ஆதரவாளர்களை மட்டும் கைது செய்திருப்பது ஏன்....? வைகோ மீது மட்டும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்....? சீமானை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகிறார்கள். எங்களது வலிமையையும், சக்தியையும் அடக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார். 

 

Next Story

நம் வசனத்தை பேசிவிட்டு நாட்டை ஆளுகிறேன் என்கிறார் - ரஜினியை விளாசிய பாரதிராஜா

Published on 30/04/2018 | Edited on 02/05/2018

bharathiraja


'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தையடுத்து பாடலாசிரியர் யுரேகா தற்போது இயக்கியுள்ள படம் 'காட்டுப்பய சார் இந்த காளி'. இப்படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக், புதுமுகம் ஐரா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டு பேசுகையில்..."பொதுவாக படத்தின் தலைப்பு வைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. குறிப்பாக இந்த படத்தின் தலைப்புகெட்டப்பய சார் இந்த காளிஎன்று வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம். அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம். நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். அவன் வெவரங்கெட்டவன், கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என அவர்களையும் அப்போதே தடுத்திருக்க வேண்டும். அவர்களை தடுக்காததால் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை ஆளப்போவதாக சொல்லி வருகிறான். எல்லாம் நாம் செய்த தவறுதான்" என்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.