Advertisment

என்னது இளையராஜா எம்.பி.யா? - மேடையில் ஷாக்கான பாரதிராஜா 

Bharathiraja

Advertisment

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா தி வாரியர் படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் அந்த நிகழ்வில், இசைஞானி இளையராஜா பாராளுமன்ற நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பாரதிராஜா, “நானும் என் நண்பன் இளையராஜவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக பயணித்துள்ளோம். அவருடைய வளர்ச்சி நம்பமுடியாத வகையில் உள்ளது. ஐந்து விரல்களில் சரஸ்வதி இருந்தால் பரவாயில்லை, எப்படிடா உடம்பு முழுவதும் உனக்கு சரஸ்வதி இருக்கு என்று அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. தற்போது பாராளுமன்றத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். இது சினிமாக்காரர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஏழேழு ஜென்மம் பிறந்தாலும் நான் சினிமாக்காரனாகத்தான் பிறக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மேடையில் பேசிக்கொண்டிருந்த பாரதிராஜாவிடம் பாராளுமன்ற நியமன எம்.பி.யாக இளையராஜா நியமிக்கப்பட்ட தகவலை ஒருவர் சொன்னதும், 'அப்படியா... இப்பவா...’ என பாரதிராஜா ஷாக்கானார். அந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bharathiraja
இதையும் படியுங்கள்
Subscribe