Advertisment

"நான் கேள்விப்பட்ட அத்தனையும் பொய்" - மாநாடு இசை வெளியீட்டு மேடையில் பாரதிராஜா பேச்சு!

Bharathiraja

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

">ad

இந்த நிகழ்வில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில், "இந்த மேடையில் இருப்பவர்களைப் பார்த்து எனக்குப் பயம் வருகிறது. நான் இத்தனை படம் பண்ணியிருந்தும்கூட இந்தப் படத்தை இவர்கள் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக உள்ளது. இந்தப் படத்தை சிம்பு தூக்கி நிறுத்தியுள்ளார். சிம்புவிடம் சில சேட்டைகள் உண்டு. அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த சேட்டைகள் இல்லையென்றால் நீ சிம்பு இல்லை. நான் அவன்கூட ஒரு படம் நடித்தேன். அற்புதமான பையன் அவன்.

Advertisment

இந்தப்படத்தில் கங்கை அமரன் வீட்டுப் பிள்ளை, இளையராஜா வீட்டுப் பிள்ளை, என் வீட்டுப் பிள்ளை ஒன்று சேர்ந்துள்ளார்கள். இந்தத் தலைமுறை நீங்கதான் பெரிய ஆட்களா? உங்களுக்குப் போட்டியா நானும் ஒரு படம் எடுக்க இருக்கிறேன். நான் பொதுவாக இசைவெளியீட்டு விழாவிற்குச் செல்லமாட்டேன். அங்கு சென்றால் பொய் பேச வேண்டியிருக்கும். ஆனால், இந்த மேடை நான் பொய் பேசத் தேவையில்லாத மேடை. நடிகர் சிம்புவிற்கு வாழ்த்துகள். அவனைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய். சிம்புவைப் பற்றி வெளியே ஆயிரம் பேசலாம். அவன் மிகச்சிறந்த நடிகன். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். மாநாடு மிகப்பெரிய வெற்றிபெறும்" எனக் கூறினார்.

Bharathi Raja maanaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe