Bharathiraja

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், இன்று (28.07.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தனுஷிற்கு வாழ்த்துதெரிவித்து இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்துமடல் எழுதியுள்ளார்.

அந்த மடலில், "திரையில் தோன்றும் ஒருசில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு உறவுகொண்டதாக அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவது உண்டு. நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதைத் திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும்டா... இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும். பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்நாளில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.