Advertisment

பேக் டூ ஃபார்ம் - மீண்டும் இயக்குநராக களமிறங்கும் பாரதிராஜா

Advertisment

Bharathiraja returns as a director

கிராமத்து கதையை யதார்த்தமாக திரையில் காட்டியவர் இயக்குநர் பாரதிராஜா. கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான 'மீண்டும் ஒரு மரியாதை' படத்தை இயக்கியிருந்தார்.

Advertisment

இதனிடையே அவ்வப்போது படங்களில் நடிக்கத்தொடங்கிய பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாகவெளியான 'திருச்சிற்றம்பலம்', 'வாத்தி' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் இயக்கம் பக்கம் பாரதிராஜா திரும்பியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. 'தாய்மெய்' என்ற தலைப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சத்தில் ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமும் அவருடைய முந்தைய படங்களைப் போல கிராமத்து பின்னணியில், அதாவது தேனி பகுதியில் நடக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharathi Raja
இதையும் படியுங்கள்
Subscribe