Advertisment

"என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை" - பாரதிராஜா 

hfdshs

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. அதன் பின்னர் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் அதன் பிறகு சின்னத்திரையில் கால் பதித்து இன்று வரை கோலோச்சி வருகிறார். இந்நிலையில் அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துதெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா நடிகை ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"என் இனிய தமிழ் மகளே,

கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி

கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..

42 வருடமாகிறது

என் பாஞ்சாலியின்

பயணம் இன்னும்

நிற்கவில்லை..

பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..

உன் திரை உலகபயணத்துக்கும்..

உன் பாசத்துக்கும்

முடிவேதும் இல்லை.

வாழ்த்துகள்

அன்புடன்

பாரதிராஜா" என கூறியுள்ளார்.

Bharathi Raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe