"என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி" - பாரதிராஜா இரங்கல்

bharathiraja condolence message to producer sa rajkannu

தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு காலமானார். அவருக்கு வயது 77. பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகும் ரயில்', கமலின் 'மகாநதி' உள்ளிட்ட பல படங்களைத்தயாரித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ள நிலையில் இவரது மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவு குறித்து பாரதிராஜா பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும்வேதனையும்அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராதிகா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எனது முதல் படமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர். எனது திரையுலகப் பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவரைப் பற்றி எப்போதும் மிகுந்த மரியாதை மற்றும் அற்புதமான நினைவும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bharathi Raja film producer radhika
இதையும் படியுங்கள்
Subscribe