Advertisment

“தமிழனுக்கு பெருமை சேர்த்த மகா கலைஞன்” - பாரதிராஜா இரங்கல்

bharathiraja condolence message for cheran father passed away

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் (84). இவர் சினிமா ஆபரேட்டராக பணியாற்றினார். சமீப காலமாக உடல் நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற அவர், இன்று அதிகாலை 6.30 மணியளவில் மதுரை பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.இவரது மரணம் சேரன் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சேரனின் ரசிகர்களும் பாண்டியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் பாரதிராஜா அவரது எக்ஸ் பக்கத்தில், “அன்னையைப் போற்றி ஆயிரம் திரைப்படங்கள் நம்மை தாலாட்டிச் சென்றாலும் தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை படைத்து தந்தையர்களுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த மகா கலைஞன் சேரன், தன் தந்தையை இழந்து வாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகன் சேரனின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

cheran Bharathi Raja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe