Advertisment

பாரதிராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி

Bharathiraja admitted in hospital

இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து தொடர்ச்சியாக வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவுக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாரதிராஜா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று பாரதிராஜாவின் பிறந்தால் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisment

bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe