Advertisment

"இந்த படம் சாமானியனின் போர்க்களமாக இருக்கப்போவது நிதர்சனம்" - பாரதிராஜா பாராட்டு!

rsgs

கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சூடு வீராங்கனையாக நடித்துள்ள 'குட்லக் சகி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதற்கிடையே 'ராக்கி' பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் 'சாணிக் காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"ராக்கி" தமிழ் சினிமாவில் ஒரு western movie.

திரைக்கு வருமுன்

இளம் படைப்பாளி

அருண் மாதேஷ்வரனின்

அடுத்த படைப்பு

சாணிக் காயிதம்

சாமானியனின்

போர்க்களமாக

இருக்கப் போவது

நிதர்சனம்.

வாழ்த்துகள்

அன்புடன்

பாரதிராஜா" என கூறியுள்ளார்.

selvaraghavan keerthy suresh Saani kayidham bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe