hdrh

Advertisment

1959ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து இன்று எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 வரை தொடர்ந்து 61 ஆண்டுகள் திரைத்துறையில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல்வேறு சாதனைகள் படைத்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து நேற்றோடு (ஆகஸ்ட் 12) 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதற்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா கமல்ஹாசனுக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...

"இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து

பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு காதாபாத்திரங்கள்,

உடலை வருத்தி

உச்சம் தொட்ட

உலக நாயகன்

என் கமலுக்கு

வாழ்த்துகள்

அன்புடன்

பாரதிராஜா" என கூறியுள்ளார்.