Advertisment

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றிபெற்ற குழு  பணியாற்றக் கூடாது!!! -பாரதிராஜா

bhrathi raja

Advertisment

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சமீபத்தில்தேர்தல் நடைபெற்றது. தலைவர் உட்படமொத்தம் 26பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தயாரிப்பளார் சங்கதலைவராகதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். மேலும் மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா,தமிழ் திரைப்படதயரிப்பாளர் சங்கத்தேர்தலில்வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், முடங்கிப்போன தயாரிப்பாளர் சங்கநிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும் எனகூறியுள்ள பாரதிராஜா, வெற்றி பெற்றவர்கள் பணியாற்றக்கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும் எனகேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாகபாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம்.அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக்கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும்.

Advertisment

திரு. முரளி இராம நாரயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்" எனஅவர் கூறியுள்ளார்.

tamil cinema producer council Bharathi Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe